வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்: வேளாண்துறையினர் தகவல்

 

தேவதானப்பட்டி, ஜூலை 11: தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், விதைகள் மானிய விலையில் உள்ளதை விவசாயிகள் பயன்படுத்தவேண்டும் என வேளாண்மைத்துறையினர் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் விதைப்பொருட்கள் பெரியகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு குடியிருப்பு வீடுகளில் இட வசதி உள்ளவர்களுக்கு நெட்டை ரகம் இரண்டு தென்னங்கன்று முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் தார்பாய், விசைத்தெளிப்பான், உளுந்து விதை, கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு தட்டு, களைக்கொத்தி, பன்னறிவாள், மற்றும் உரங்கள் ஜிப்சம், ஜிங்சல்பேட், ஆகியவை 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. விதை கிராமத்திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் முதலான திட்டங்கள் மூலம் இடுபொருட்கள் முன்னுரிமை அடிப்படையில் கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் (அலுவலகம் இருப்பு வடுகபட்டி), விவசாயிகள் தொடர்பு தங்களது சந்தேகம் மற்றும் இடுபொருட்களை வாங்கி பயன்பெறவேண்டும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்: வேளாண்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: