வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி 73 நாயன்மார்கள் வீதிஉலா

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழாவையொட்டி 73 நாயன்மார்களுடன், வெள்ளி ரிஷபவாகனத்தில் சந்திரசேகர் சுவாமி சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 5ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாசிமக திருவிழாவில் சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பின் கோயிலில் உள்ள 63 நாயன்மார்கள் 10 தொகையாடியவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

The post வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி 73 நாயன்மார்கள் வீதிஉலா appeared first on Dinakaran.

Related Stories: