×

வெளிமாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தல்; லாரி பார்க்கிங் மையத்தில் பதுக்கிய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே லாரி பார்க்கிங் மையத்தில் பதுக்கி வைத்து நள்ளிரவில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வாகனங்களுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் ஆர்டிஓ தனஞ்செழியன், தாசில்தார் லலிதா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி காளப்புதூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மலையடிவாரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தை சுற்றியிலும் 20 அடி உயரத்திற்கு இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்டு, இயங்கும் தனியார் லாரி பார்க்கிங் மற்றும் புக்கிங் மையத்தின் நுழைவு பகுதியில் கனரக லாரிகள், வேன்கள், மினி வேன்கள் உள்ளிட்டவை தார்பாயினால் மூடப்பட்டு சென்று வந்த வண்ணம் இருந்ததை பார்த்தனர்.  உடனே அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அந்த மைதானத்திற்குள் நுழைந்தனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் பின்புற கேட் வழியாக மலைப்பகுதிக்கு தப்பியோடினர். இதனையடுத்து, அங்கிருந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசியை பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், அங்கிருந்த வேன் மற்றும் லாரியில் இருந்த சுமார் 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகனங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திர பதிவு எண்களை கொண்டுள்ளதால் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த மைதானத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்….

The post வெளிமாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தல்; லாரி பார்க்கிங் மையத்தில் பதுக்கிய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Dinakaran ,
× RELATED முதியவர் கொலையா? போலீஸ் விசாரணை பள்ளிகொண்டா அருகே