நடிகர் அஜித்குமாருக்கு அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு தமிழக அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித்துக்கு நேற்று (மே 1) 47வது பிறந்தநாள். அவரது ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். சில ரசிகர்கள்,  அஜித் வீட்டுக்கு எதிரில் நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர். ஆனால், அஜித் சென்னையில் இல்லை. புனே சென்றுவிட்டார். வரும் 6ம் தேதி  ஐதராபாத்தில் தொடங்கும் ‘‘விஸ்வாசம்’’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது டிவிட்டர் பதிவில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்திருந்தார். எல்லா வெற்றியும் பெற்று, நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் ஒருவருக்கு அமைச்சர்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்துள்ள விளக்கத்தில், ‘‘நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை, என்னை  அறியாமல் எனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: