×

விலை மதிப்புள்ள நாய் திருடிய உணவு டெலிவரி ஊழியர் கைது

சென்னை: சாலிகிராமம் காந்திநகர் அம்பேத்கர் ெதருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தில்லைக்கரசி (41). இவர் விலை மதிப்புள்ள நாய் ஒன்று வளர்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி இந்த நாய் மாயமானது. அதிர்ச்சியடைந்த தில்லைக்கரசி அப்பகுதி முழுவதும் தேடியும் நாய் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் நாயை திருடி சென்றது தெரியந்தது. உடனே உணவு டெலிவிரி செய்த நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை வீட்டின் அருகே அழைத்து கையும் களவுமாக தில்லைக்கரசி பிடித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் சுஜித்(21) என்றும், இவர் பைக்குகளை திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….

The post விலை மதிப்புள்ள நாய் திருடிய உணவு டெலிவரி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saligiramam Gandhinagar ,Ambedkar Chedhu ,Dillaikarasi ,
× RELATED சென்னையில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது