வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணை பயிற்சி முகாம்

 

புதுக்கோட்டை, ஜூலை 26: புதுக்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணை பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசின் ஊரக புத்தாக்கத் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கு சமுதாயப் பண்ணைப் பயிற்சி மற்றும் கோழி, ஆடு வளர்ப்புப் பயிற்சி புதுக்கோட்டையிலுள்ள கால்நடை பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடக்க நிகழ்ச்சிக்கு மையத்தின் தலைவர் புவராஜன் தலைமை வகித்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் விவசாய ஆலோசகர் திலகவதி கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் செல்வம் வாழ்த்திப் பேசினார். கால்நடை ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர். ஷீபா, கோழி, ஆடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களும் அவற்றைத் தடுக்கும் தடுப்பூசிகளும் குறித்துப் பேசினார். தொடர்ந்து மையத்தின் பயிற்சியாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகளை வழங்கினர். இந்தப் பயிற்சி இன்றும் (26ம்தேதி) நடைபெறவுள்ளது.

The post வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: