வார்டு உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி

மல்லசமுத்திரம், ஜன.6: மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் வட்டாரத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் பி.டி.ஓ லோகமணிகண்டன் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மீனா, தனசேகரன் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர்களின் பணிகள், தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை அணுகுவது, சட்ட வழிமுறைகள், கடமைகள், குழந்தை திருமணத்தை தடுத்தல், வார்டுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்தல், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

The post வார்டு உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: