வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை விரைவாக நீக்க வேண்டும்: நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

 

திண்டுக்கல், டிச. 3: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் மற்றும் திருத்தப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்படி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயர்கள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதனையடுத்து திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு தாசில்தார் செழியன், தேர்தல் தனித்துணை தாசில்தார் செளந்தரபாண்டியன், நேர்முக உதவியாளர் முத்துராமன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஆர்டிஓ கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் விதமாக, பட்டியலில் உள்ள இறந்த நபர்களைக் கண்டறிந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இறப்புச் சான்றிதழைப் பெற்று சம்பந்தப்பட்ட பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு இருந்தால், அதனையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை விரைவாக நீக்க வேண்டும்: நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: