வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

 

ராஜபாளையம், ஜூன் 23: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளத்தில் நேற்று நடைபெற்றது.மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் சூரிய மூர்த்தி கலந்துகொண்டார். கூட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயணப்படியை மீண்டும் வழங்க வேண்டும், ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் மாநில துணை தலைவர் வீரபுத்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தர பாண்டியன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கருபூமிராஜன் மற்றும் சிங்காரம் சிறப்புரையாற்றினார். அருப்புக்கோட்டை திருச்சுழி, காரியாபட்டி, விருதுநகர், வெம்பக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள், புதிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை வட்ட பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க தலைவர் சேகர் செய்திருந்தார்.

The post வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: