வரத்து அதிகரிப்பால் விலை சரிவு ஓட்டல்களில் தக்காளி சட்னி, சாதம் தாராளம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் ₹120க்கு விற்ற தக்காளி, வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து ₹10க்கு விற்பதால் ஓட்டல்களில் தாராளமாக தக்காளி சட்னியை வாரி வழங்கி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு இடைவிடாமல் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. நாள் கணக்கில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றதால் பயிர் நாசமடைந்தது. இதனால், மகசூல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தக்காளி பயிர் அடியோடு நாசமானதால், விலை ஜெட் வேகத்தில் எகிறி கிலோ ₹120 வரை விற்பனை செய்யப்பட்டது. சமையல் பதார்த்தங்களில் தக்காளியை தவிர்க்க முடியாது என்பதால், விலை உயர்வை பொருட்படுத்தாமல் மக்கள் குறைவாக வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஓட்டல்களில் தக்காளி பயன்பாட்டை குறைத்துக் கொண்டனர். போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஓட்டல்களில், தக்காளி உபயோகத்தை குறைத்துக் கொண்டனர். இதன் எதிரொலியாக விற்பனையும் டல் அடித்தது. இந்நிலையில், தற்போது சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ 10 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், ஓட்டல் கடைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை டிபன் முதல் இரவு டிபன் வரை அனைத்து விதமான உணவிற்கும் தக்காளியை தாராளமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன்மூலம் ஓட்டல்களுக்கு சாப்பாடு பிரியர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்….

The post வரத்து அதிகரிப்பால் விலை சரிவு ஓட்டல்களில் தக்காளி சட்னி, சாதம் தாராளம் appeared first on Dinakaran.

Related Stories: