வத்தலக்குண்டு, ஜூலை 30: வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூவம்பட்டியில், கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டியை அடுத்த பூவம்பட்டியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வந்தது. இந்நிலையில் தனியார் சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படுவதாக கூறி, கட்டுமான பணியை தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல், அப்பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுபோல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு நிலவுவதுடன், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, கால்வாய் கட்டும் பணிகளை விரைவாக தொடங்கி முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூவம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வத்தலக்குண்டு ஊராட்சியில் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.