ரூ.92 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை

 

போச்சம்பள்ளி, ஏப். 26: போச்சம்பள்ளி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் இநாம் (இடெண்டர்) முறையில் நேற்று விவசாயிகள் கொண்டுவந்த 1,330 கிலோ கொப்பரை ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. போச்சம்பள்ளி வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூட்டத்தில் நேற்று இநாம் முறையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,330 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஈரோடு, திருப்பூர், காங்கேயம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் கொப்பரை கிலோ ரூ.79க்கு விற்பனையானது. ஒட்டுமொத்தமாக கொப்பரை ரூ.92,637க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் கொப்பாரை மட்டுமின்றி, பருத்தி, காரமணி, கொள்ளு உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனை கூடத்துக்கு கொண்டுவந்து இநாம் திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.92 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: