ராஜபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

 

ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை சிவகாமிபுரம் தெரு சாலியர் சமுதாய தலைவர் குரு பாக்கியம் துவக்கி வைத்தார் . ராஜபாளையம் அரசு மருத்துவமனை கண் மருத்துவ நிபுணர் டாக்டர் சித்ரா மற்றும் சீனியர் கண் மருத்துவ உதவியாளர்கள் ஆறுமுகம், பால்ராஜ் ஆகியோர் கண் சம்பந்தப்பட்ட நோய்களை பரிசோதனை செய்ததனர். இதில் 6 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தர் பாலாஜி தைராய்டு கட்டி, குடல்வால், வெரிகோஸ்வெயின் மற்றும் பெண்களுக்கான மார்பக கட்டி, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை இறக்கம், எலும்பு முறிவு குறித்து பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். பொது மருத்துவ நிபுணர்கள் டாக்டர் ஆனந்த சரவணன் மற்றும் டாக்டர் ராஜகோபால், டாக்டர். தேவி மகாலட்சுமி ஆகியோர் பரிசோதனை செய்தனர். முகாமில் 145 பேர் பயன் பெற்றனர். அன்னை சந்தியா கண் தான கழக நிறுவனர் நாகலட்சுமி பால்ராஜ் நன்றி கூறினார்.

The post ராஜபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: