மோட்டார் பயன்பாடு இல்லாமல் இயற்கையாக நீர் வடிகிற வகையில் கால்வாய்கள் சீரமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மோட்டார் பயன்பாடு இல்லாமல் இயற்கையாக நீர் வடிகின்ற வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சோழிங்நல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி, செம்மொழி பூங்கா சாலை, துரைப்பாக்கம் சதுப்பு நில பகுதி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சிறப்பு அலுவலர்கள் வீரராகவராவ், ரவிச்சந்திரன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பெருநகர சென்னை மாநகராட்சியில் 220 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. நகராட்சி நிர்வாத் துறையும், நீர்வள ஆதாரத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் பல்வேறு பணிகள் மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் 15 முதல் 35 செ.மீ. வரையிலான மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. மேலும் 90% பாதிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகர எல்லைக்கள் பல்வேறு இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதால் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.சோழிங்கநல்லூர் தொகுதி 7 லட்சம் வாக்களர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி. 40க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள், குளங்களில் பெருக்கெடுத்து ஓடுகின்ற உபரிநீர் ஒட்டுமொத்தமாக செம்மஞ்சேரி பகுதிக்குள் நுழைந்து 5 கி.மீ தூரமும் குடியிருப்புகளை பாதித்த பிறகு ஒக்கியம் மதகு வழியாக பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குள் செல்கிறது. கடந்த ஆண்டு 166 மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்ேபாது மோட்டார் பயன்பாடு இல்லாமல் இயற்கையாக நீர் வடிகின்ற வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post மோட்டார் பயன்பாடு இல்லாமல் இயற்கையாக நீர் வடிகிற வகையில் கால்வாய்கள் சீரமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: