கோவை, ஜூலை 27: மொரிசியஸ் நாட்டின் இந்தியாவுக்கான (தென்னிந்தியா) கௌரவ வணிக கமிஷனராக கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் இந்தியா மொரிசியஸ் அரசு நியமித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான கடிதத்தை ரஷ்யாவுக்கான மொரிசியஸ் தூதுவர் பேராசிரியர் டாக்டர் கேஸ்வர் ஜன்கி வழங்கினார்.
இந்த மிக முக்கிய பதவியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவூல பிரிவு கல்வித் துறை அமைச்சர் லீலாதேவி தகூன் அங்கீகரித்தார். இதற்கான விழாவில் மிக முக்கிய நிகழ்வாக மொரிசியஸ் குளோபல் எஜுகேஷன் அவுட்டரிச் நிறுவனர் ஜெயசங்கர் மற்றும் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ் ஆகியோர் முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் எஜுகேஷன் 4.0 திட்டத்தின் படி கல்வியியல் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
The post மொரிசியஸ் நாட்டின் தென்னிந்தியாவிற்கான கவுரவ வணிக ஆணையராக நேரு கல்வி குழுமத்தின் தலைவர் நியமனம் appeared first on Dinakaran.