மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: முன்னாள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து

 

சிவகாசி, ஜன.6: விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், ஜெ.பேரவை மாவட்ட தலைவராக மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட துணை செயலாளர்களாக சீனிவாசபெருமாள், கார்த்திக், செல்வகுமரன், தொகுதி கணேஷ்பாண்டியன், மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளராக அம்மாபட்டி சுப்புக்காளை, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர்களாக அழகர்குமார், வேண்டுராயபுரம் காளீஸ்வரபாண்டியன்,

என்ஜிஓ காலனி அஜய்கிருஷ்ணா, சிவகாசி கிழக்கு எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக இளநீர்செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி, சிவகாசி மேற்கு ஜெ.பேரவை ஒன்றிய செயலாளராக கங்காகுளம் பால்பாண்டி, சிவகாசி மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளி, மாணவர் அணி ஒன்றிய செயலாளராக தனுஷ் மற்றும் புதிய மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் ஒன்றியம் வடக்கு, தெற்கு, மேற்கு என 3 ஆக பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று திருவில்லிபுத்தூர் ஒன்றியம் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வத்திராயிருப்பு, விருதுநகர் ஒன்றியங்களும் பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: முன்னாள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: