மேற்கு புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்-முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில்,  மேற்கு புறவழிச்சாலை பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என, முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி  உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் முறையீட்டு கூட்டம்  நடைபெற்றது. இதற்கு, உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். பல்வேறு  துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.இதில்  விவசாயிகள் பலர், தங்கள் கோரிக்கை குறித்து மனுவாக எழுதி கொடுத்தனர்.  மேலும் அதுகுறித்து விவாதம் செய்தனர்.விவசாயிகள் பலர் கூறுகையில், ‘பொள்ளாச்சி  உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள்  முறையீட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும்  விவசாயிகள் தெரிவிக்கும்  தகவல்களை, உயர் அதிகாரிகளுக்கு முறையாக எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், பல  மாதமாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல்  இருப்பது எந்தவிதத்தில்  நியாயமாகும்.  எனவே வரும் கூட்டத்தில் இருந்து  ஒவ்வொரு மாதமும் பல்வேறு  துறை  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கோரிக்கை உடனே நிறைவேறும்.  அதற்கான ஏற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். கோவைரோடு சக்தி மில்லில்  இருந்து பாலக்காடு ரோடு நல்லூர் வரையிலும்  துவங்கப்பட்ட மேற்கு  புறவழிச்சாலை திட்டபணி பாதியில் நின்றுள்ளது. அதனை மீண்டும்  துவங்கி  துரிதபடுத்த வேண்டும். திப்பம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில்,  இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக புகார் எழுகிறது.  எனவே, அங்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். திப்பம்பட்டியில்  செயல்பாடின்றி உள்ள இளநீர் வணிக வளாகத்தை, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக  செயல்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரளா  வாடல் நோய், தென்னையில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த  சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை  கூடங்களில் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும்  செயல்படுத்தி, கொப்பரை விலை சரிவை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், தற்போது இரண்டாம் போக நெல்  சாகுபடிக்கு நாற்று ஏற்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் நாற்று நடவு  மேற்கொள்ளபடுள்ளது. எனவே, நாற்றுகளை விரைந்து நடவு செய்ய, வேளாண்மைதுறை  மூலம் நாற்று நடவு இயந்திரம், குறைந்த வாடகையில் வழங்க வேண்டும். குளத்தை  சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றனர்….

The post மேற்கு புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்-முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: