மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கர்நாடக முதல்வர் பேட்டி

பெங்களூரு: தமிழக சட்ட சபையில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது. மாநில அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பவராஜ்பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது: ‘காவிரி, நமது மாநிலத்தில் உற்பத்தி ஆன நதி ஆகும். மேகதாது குடிநீர் திட்டம் நமது மாநிலத்திற்கு சம்பந்தப்பட்டது. காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். அதன்பிறகு மீதியுள்ள தண்ணீரை பயன்படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறது. தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் அணை கட்டுவதை தடுக்கும் வகையில் எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’ இவ்வாறு அவர் கூறினார்….

The post மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கர்நாடக முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: