மாவட்டத்தில் பரவலாக மழை சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வழுந்தன. டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்தது.கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது. போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு, தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. போச்சம்பள்ளியில் இருந்து மத்தூர் செல்லும் சாலையில் நீதிமன்ற கட்டிடத்தின் அருகேயுள்ள டிரான்ஸ்பார்மர் சாலையில் விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன், உடனடியாக மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்ஊழியர்கள், டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்தினர். போச்சம்பள்ளி அகே வீரமலையில் கன்னியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை, சூறைக்காற்றுக்கு தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. மேலும், வீட்டினுள் மழைநீர் புகுந்தது. பாரூர் ஞானவேல்மணியகாரர் என்பவரின் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து நாசமானது. போச்சம்பள்ளி அடுத்த சந்தூர், வெப்பாலம்பட்டி பகுதியில் மாஞ்செடிகள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு மட்டும், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: ஓசூர் 59, நெடுங்கல் 23.4, போச்சம்பள்ளி 22.2, பாரூர் 16.4, தளி 10, கிருஷ்ணகிரி 6.2, சூளகிரி 5 என மி.மீ., …

The post மாவட்டத்தில் பரவலாக மழை சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: