போச்சம்பள்ளி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே, கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், மத்தூர் அருகே சாணிப்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவரது விவசாய நிலத்தின் அருகே நேற்று முன்தினம் தீ பிடித்தது. அவரது நிலத்தில் இருந்த சுமார் 4ஏக்கர் மா தோப்புகளில் தீ பிடித்து முற்றிலும் எரிந்தது. இதையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதேபோல், போச்சம்பள்ளி அருகே அப்புகொட்டாய் பகுதியில் நேற்று பஞ்சாயத்துக்கு சொந்நமான குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, குப்ைபகள் எரிந்தது. இதை தீயணைப்புதுறையினர் தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர். அதே போல், போச்சம்பள்ளி அருகே நேற்று முன்தினம் அத்திகானூர் கிராமத்தில், ஒரு மாந்தோட்டத்தில் தீ பிடித்தது. தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், அவர்கள் விரைந்து வந்து தீயை உடனடியாக அணைத்தனர்.
The post மாந்தோட்டத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.