கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கேரளா கிளப்பில் நடந்தது. சங்க தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த பணிகள் முடிந்த பின்னர் பிடித்தம் செய்யப்படும் 5 சதவீத டெபாசிட் தொகையை திரும்ப வழங்க வேண்டும். இஎம்டி, எப்எஸ்டி தொகைகளை 6 மாதம் முதல் 1 ஆண்டிற்குள் திரும்ப தர வேண்டும். ஒப்பந்த பணிகளில் சீனியாரிட்டி பட்டியலை கடை பிடிக்க வேண்டும். பைல்களை முறையாக பராமரித்து பில் தொகைகளை பராபட்சமின்றி வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் நிலுவையில் வைக்கப்பட்ட பில் தொகைகளை தாமதமின்றி வழங்க் வேண்டும். பட்ஜெட் ரிஜிஸ்டரில் வரவு வைக்காமல் டெண்டர் கோரக்கூடாது. பட்ஜெட் ஒதுக்கப்படாமல் டெண்டர் விடப்படும்போது கடும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. பொது நிதியில் பணம் இல்லாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். முன் கூட்டியே பணிகளை அறிவிப்பின்றி துவங்க அனுமதிக்கக்கூடாது. இதை மாநகராட்சி நிர்வாகத்தினர், பொறியியல் பிரிவினர் கவனிக்க வேண்டும். கணக்கு பிரிவு அதிகாரிகள் பில் தொகை ஒதுக்கீடு செய்வதில் உரிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
The post மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.