மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்..!!

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் உறைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மாலை முதல் தற்போது வரை சற்று மழை தணிந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பெரம்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 4 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. இதன் காரணமாக நெல் மணிகள் முளைக்க தொடங்கியிருக்கின்றன. மீதமுள்ள நெல்மணிகள் பூஞ்சை பிடித்தும், கருத்தும் சேதமாகி விட்டது. கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்கிற்கு அனுப்பப்படாத நெல் மூட்டைகளே தற்போது முளைக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: