பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சலுப்பபட்டியில் நேற்று பாண்டி (51) என்பவரது தோட்டத்தில், துவரிமானை சேர்ந்த இளங்கோவன் (46) வேலை செய்து வந்துள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி விஏஓ கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடம் சென்ற சாப்டூர் போலீசார் இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். இளங்கோவன் உடலை போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பாண்டி தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தியதில், 100, 200, 500 கட்டுகளாக ரூ.11,64,500 கள்ள நோட்டுகள் இருந்தது தெரிந்தது. மேலும் கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் நவீன அச்சடிக்கும் இயந்திரங்கள், மை போன்ற பொருட்களும் இருந்தன. இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார், அங்கிருந்த பாண்டியை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தானும், இறந்த இளங்கோவனும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து நேற்றிரவு பாண்டியை, சாப்டூர் போலீசார் கைது செய்தனர். பணம் பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலில் இளங்கோவன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்….
The post மதுரை அருகே 11 லட்சம் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு இயந்திரங்கள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.