மதுரையில் வாக்கு சீட்டு முறை கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன. 5: மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் சுடர்மொழி தீபம், ரவிக்குமார், அரசமுத்து பாண்டியன், சிந்தனைவளவன் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை தீவிர பேரிடராக அறிவித்து தமிழக அரசு கேட்டு கொண்ட ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் தலைமை நிலைய முதன்மை செயலாளர் பாவரசு, பஞ்சமிசசி, கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணை செயலாளர் அய்யங்காளை, முன்னாள் மண்டல செயலாளர் கலைவாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரவணன், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் ஐடிஐ முத்தையா, ஊடக பிரிவு மாநில செயலாளர் அகரன், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநகர் அமைப்பாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் வாக்கு சீட்டு முறை கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: