மணப்பாக்கம், கடுக்கலூர், வெளியம்பாக்கம் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு

மதுராந்தகம்: கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், மதுராந்தகம் கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல தரை பாலங்கள் சேதமடைந்தன. இதில் சூனாம்பேடு, பெரும்பேர் நெடுஞ்சாலை மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தரைப் பாலம், வில்லிவாக்கம் சாலை கடுக்கலூர் தரைப் பாலம், கொங்கரை, கரசங்கால் சாலை வெளியம்பாக்கம் தரைப் பாலம் ஆகியவை ஒவ்வொரு மழையின் போதும் தொடர்ந்து சேதமடைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதைதொடர்ந்து, தமிழக அரசு சார்பில், மேற்கண்ட பகுதிகளில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர், எம்பி செல்வம், மதுராந்தகம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆண்ட்ரூஸ், உதவி பொறியாளர்கள் மணிகண்டன், அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டபோது, மேற்கண்ட 3 பாலங்களும், மேம்பாலங்களாக கட்டிமுடிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு தரைப் பாலமும் ரூ.3.5 கோடி செலவில் மேம்பாலமாக கட்டி முடிக்கப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.10.5 கோடி. மழைக்காலம் முடிந்தவுடன்  பணிகள் தொடங்கி விரைந்து முடிக்கப்படும் என்றார்….

The post மணப்பாக்கம், கடுக்கலூர், வெளியம்பாக்கம் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: