விருதுநகர், ஜூலை 31: மக்காச்சோள பயிரில் ஏற்படும் தண்டுதுளைப்பான் நோயை தடுப்பது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். மக்காச்சோளம் இப்பயிர்கள் வளர்ச்சி நிலையை அடையும் நேரத்தில் தண்டுதுளைப்பான் நோய் ஏற்படும். இதனை தவிர்க்க என்டோசல்பான் மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி எனும் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்குப்பின் மீண்டும் இதேபோல் அமைக்க வேண்டும். மேலும் இக்காலங்களில் ஏற்படும் அடிச்சாம்பல் நோயை தவிர்க்க 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் மெட்டலாக்சின் மற்றும் 2.5 கிராம் மேன்போசெட்ஸ் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மக்காச்சோளத்தை தாக்கும் தண்டுதுளைப்பான் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.