×

சாத்தான்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

சாத்தான்குளம், நவ.11: சாத்தான்குளத்தில் மதுவை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.சாத்தான்குளம் பகுதியில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான் குளம் எஸ்.ஐ. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தச்சமொழி மதுபான கடை அருகில் வரும்போது போலீசை கண்டதும் ஒருவர் தலைமறைவானார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் சாத்தான்குளம் மாதாங்கோயில் தெருவை சேர்ந்த வீரபாகு மகன் சுந்தர் (42) எனவும், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சாத்தான்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Chatankulam ,Chatankulam police ,Satan ,
× RELATED அம்பலச்சேரி பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்