×

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

திருச்சி, நவ.11: திருச்சி பஞ்சப்பூரில் நடந்து வரும் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடந்து வரும் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமானப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நோில் ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது:
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம், பல்வகைப்பயன்பாட்டு மையம், கனரக சரக்குவாகன முனையம், சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு பணிகளும் விரைந்த நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கா். கட்டுமானப் பரப்பளவு 7.02 ஏக்கர். புறநகர் பஸ் நிறுத்த தடங்கள் 124, நீண்ட நேர பஸ் நிறுத்த தடங்கள் 142, குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78 என மொத்தம் 404 பஸ் நிறுத்த தடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இது தவிர நகர பஸ்கள் நிறுத்த தடங்கள் 60ம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 70 கடைகள், 556 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, ஆயிரத்து 125 டூவீலர்கள் நிறுத்தும் வகையிலான டூவீலர் பார்க்கிங், 350 ஆட்டோக்கள் நிறுத்த வசதியான ‘ஆட்டோ ஸ்டாண்ட்’ மற்றும் நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையமானது 5.20 ஏக்கர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் அடித்தள கட்டுமான பரப்பளவு 1.47 ஏக்கர். தரைத்தள கட்டுமான பரப்பளவு 2.46 ஏக்கர். முதல் தள கட்டுமான பரப்பளவு 2.29 ஏக்கர். 2,3,4ம் தள கட்டுமானங்களின் பரப்பளவு 0.22 ஏக்கர். தரைத்தள கடைகளின் எண்ணிக்கை 149. முதல்தளத்தில் 193 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. கனரக சரக்கு வாகன முனையம்: மொத்த பரப்பளவு 29 ஏக்கர், கட்டுமான பரப்பளவு 2.88 ஏக்கர், தொகுப்பு-1 வாகன நிறுத்த தடங்கள்-256, தொகுப்பு-2 வாகன நிறுத்த தடங்கள்-104. தரைத்தள கடைகள்-20. முதல் தளத்தில் தங்குமிட வசதியுடன் உணவக கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.

சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்: சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் ஆயிரத்து 48 மீ, அகலம் 36 மீ. (ஒருங்கிணைந்த பஸ் முனைய பகுதியில்). சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 744 மீ, அகலம் 24 மீ. (கனரக சரக்குவாகன முனையம் பகுதியில்). ஒருங்கிணைந்த பஸ் முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியன ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொிய கருப்பன், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் சரவணன், நகரப்பொறியாளர் சிவபாதம், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனா்.

The post பஞ்சப்பூர் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் appeared first on Dinakaran.

Tags : Punjpur Bus Station ,Trichy ,Municipal Administration Minister ,K. N. Nehru ,Noel ,Municipal Administration Department ,Trichy Punjab ,Dinakaran ,
× RELATED திருச்சியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு..!!