மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 44.56 லட்சம் பேர் பயன்

சென்னை: மக்களை தேடி மருத்துவம்  திட்டம் மூலம் நேற்று வரை 44.56 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின்  முதன்மை திட்டமான மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி  வைக்கப்பட்டது. இத்திட்டமானது முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1172 அரசு துணை சுகாதார  நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில்  சென்னை, கோவை, நெல்லை தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர்புற ஆரம்ப  சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும்  விரிவுபடுத்தும் வகையில் 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு  ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  மாநகராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு  மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி  பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடை நிலை சுகாதார சேவையாளர்கள்,  இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் இடம் பெறுவர். பொது  சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினர் செயல்பாடுகளை கண்காணித்து  வழி நடத்துவார்கள். இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று வரை உயர்  ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்கள் முதன் முறையாக 15,08,708 பேரும், தொடர் சேவைகள் 3,30,802 பேர்,  நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்கள் முதன் முறையாக 10,30,027 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 2,26,942 பேர், உயர்  ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்கள் முதன் முறையாக 7,52,366 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 1,70,982 பேர், நோய் ஆதரவு சிகிச்சை சேவை பெற்றவர்கள் முதன் முறையாக 1,20,526 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 31,918 பேர்,  இயன்முறை சிகிச்சை சேவைகள் பெற்றவர்கள் 2,19,469 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 63,897 பேர், சிறுநீரக நோய்க்கு  சுயடயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் முதன் முறையாக 747 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 158 பேர் என முதன்முறையாக 36,31,843 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 8,24,699 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அதன்படி இதுவரை மொத்தம் 44,56,542 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். …

The post மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 44.56 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: