பொன்னமராவதி அருகே சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் மாம்பழங்கள் வீசி தரிசனம்

பொன்னமராவதி, ஜூலை 2: பொன்னமராவதி அருகேயுள்ள சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மாம்பழங்களை வீசி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பரியாமருதுபட்டி சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் தேரோட்ட திருவிழா கடந்த 22ம் தேதி காப்புகட்டுதழுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினசரி மண்டகப்படி சுவாமி வீதிவுலா நடைபெற்றது.
இதில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.

இதன் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பான அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் சுவாமி எழுந்தருளினாள். தொடர்ந்து தேரை பரியாமருதுபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்று வழிபட்டனர். தேர் செல்லும் பகுதியில் பொதுமக்கள் நேர்த்தி கடனுக்காக மாம்பழங்கல் வாங்கி வைத்து வீசினர். இதனை இளைஞர்கள் பிடித்து எடுத்துச் சென்றனர். சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் பங்குபெற்றனர். நெற்குப்பை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post பொன்னமராவதி அருகே சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் மாம்பழங்கள் வீசி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: