பொங்கல் பண்டிகைக்காக உருண்டை வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் பகுதியில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.திருவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அதிகளவு கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பை அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மலையாளம் வெல்லம் என அழைக்கப்படும் உருண்டை வெல்லமும், மண்டை வெல்லமும் தயாரிக்கப்படுகிறது. இந்த வெல்லம் கேரளா பகுதி வியாபாரிகள் அதிகளவு வாங்கி செல்வர்.இங்து தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம், சேலத்தில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு இணையாக இருப்பதால், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருவர் கூறும்போது: உருண்டை வெல்லம் பார்ப்பதற்கு திருப்பதி லட்டை போல காண்பவர்களின் கண்களை கவரும் வகையில் இருக்கும். தற்போது 1 கிலோ உருட்டு வெல்லம் ரூ.38 முதல் ரூ.50 வரை விற்க்கப்படுகிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை. அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தங்களிடம் உள்ள உருண்டை வெல்லங்களை வாங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….

The post பொங்கல் பண்டிகைக்காக உருண்டை வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: