பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.  இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிர்க்கதியாய் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. இதனால் அவர்களுக்கு ஆதரவளிக்கும்பொருட்டு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளை 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளில் உள்ளூர் சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல அமைப்புகளும் ஈடுபடலாம். இதற்கான சட்டரீதியான நடைமுறைகளுடன் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு அரசால் வளர்க்கப்படுவார்கள். குழந்தைகளுக்கான உதவி ஏன் 1098-லும் தகவல் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது….

The post பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் மத்திய அரசு appeared first on Dinakaran.

Related Stories: