பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

பெரம்பலூர், ஏப்.11: பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளு க்கு, நாள் அதிகரித்து வரு கிறது. கொளுத்தும் வெயி லின் காரணமாகத் திண்டா டிவரும்பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பெரம் பலூர் மாவட்டத்தின் முதல் கோடைகால இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாலக்கரை அருகில் நடைபெற்றது. பெரம்பலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூடு (எ) பொன்.கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச் சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசா எம்பி கலந்துகொண்டு இலவச தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் ராஜ்குமார், வேப்பந்தட்டை ஜெகதீசன், நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை ஒன் றியக்குழு தலைவர் ராமலி ங்கம், மாவட்ட அணிஅமைப்பாளர்கள் பாரி, மகாதேவி ஜெயபால், ரமேஷ், தொமுச கவுன்சில் மாவட்ட தலைவர் குமார், செயலாளர் ரெ ங்கசாமி, நகராட்சி கவுன்சிலர் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

The post பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: