புதுக்கோட்டை அருகே இல்லம் தேடி கல்வி முப்பெரும் விழா

புதுக்கோட்டை,ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம் கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சார்பில் கட்டியாவயலில் முப்பெருவிழா நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் சிறப்பாக நடித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடிக்க காரணமாக இருந்த மாணவர்களுக்கும்,

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுத்த தன்னார்வலர்களுக்கும், விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயங்களை வழங்கினர். கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டியாவயல் தன்னார்வலர் வினோதா, மீனாட்சி மற்றும் எல்லைப்பட்டி தன்னார்வலர் ஆதிதிவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

The post புதுக்கோட்டை அருகே இல்லம் தேடி கல்வி முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: