புதுகை நகராட்சி 9வது வார்டில் குப்பை கொட்டாமல் இருக்க கோலம் வரைந்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை, மே 5: புதுக்கோட்டை, நகராட்சி 9வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் செந்தாமரை பாலு. இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளின் ஓரங்களில் தினமும் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி சென்றுள்ளனர். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றிய அவர், குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கோலம் இட்டு பொதுமக்கள் யாரும் குப்பை கொட் டக்கூடாது என்று எழுதி விழிப்புனர்வு ஏற்படுத்தியுள்ளார்.

The post புதுகை நகராட்சி 9வது வார்டில் குப்பை கொட்டாமல் இருக்க கோலம் வரைந்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: