பில்லங்குளம் கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிக்கம்பங்கள்

பெரம்பலூர்,ஆக.22: பில்லங்குளம் கிராமத்தில் பேருந்து நிலையம் வளைவில் போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ள 3 கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பில்லங்குளம் கிராமத்தில், பெரம்பலூரில் இருந்து சின்னசேலம், கள்ளக் குறிச்சி செல்லும் தார் சாலையில், பேருந்து நிலையம் வளைவில் 3 கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை வழிவிட்டு ஒதுங்கும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் நடந்த செல்லும் மக்கள், இரு சக்கர வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியவில்லை. மேற்படி மூன்று கம்பங்களையும் அகற்றி வார சந்தையை விரிவாக்கம் செய்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த வாரம் இரண்டாவது வளைவில் லாரி இடித்துத் தள்ளி இரு சக்கர வாகனம் ஒன்று நசுங்கி உடைந்து விட்டது. மேலும் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது. இது குறித்து ஒன்றிய நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கும், கனரக வாகனங்கள், மணல் லாரிகள், கார்கள், பள்ளி வாகனங்கள், அரசு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிகமாக சொல்லும் பாதியாக உள்ளது. எனவே ஆள் ஒதுங்கவும் இடம் பற்றாக் குறையாக உள்ளது. மேற்படி கொடிக் கம்பங்களை அகற்றி விட்டால் எல்லோருக்கும் நன்மையாக அமைந்துவிடும் என அந்த கோரிக்கை மனுவில் பில்லங்குளம் கிராமப் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

The post பில்லங்குளம் கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிக்கம்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: