பிரதமர் கல்வி உதவி திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் கல்வி ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல், பிளஸ்2 அல்லது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்று முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. விவசாயம், கல்வியியல் (பி.எட்.,) படிப்பு மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம் மற்றும் பல தொழிற்கல்விகள் படிக்கும் சிறார்கள், பாரதமர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகின்றனர். இந்நிதியுதவி தற்போது உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரரின் மகளுக்கு வருடத்திற்கு ₹36ஆயிரம் வீதமும், மகனுக்கு ₹30ஆயிரம் வீதமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், கல்விச் சலுகையினை அதிக அளவில் பயன் பெறும் பொருட்டு, தற்போது கால அவகாசம் வரும் நவம்பர் 30ம்தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து, உரிய அறிவுரையினை பெற்று www.ksb.gov.in என்ற இணைய தள முகவரியில், உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அவ்வாறு பதிவு செய்த விவரத்தினை, தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post பிரதமர் கல்வி உதவி திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: