பம்பு செட் மற்றும் மழையை நம்பி சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் நாற்று பறிப்பு, நடவுகளில் பெண்கள் மும்முரம்

தஞ்சாவூர், செப். 29: பம்பு செட் மற்றும் மழையை நம்பி சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது தஞ்சாவூரில் நாற்று பறிப்பு, நடவு செய்யும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. தஞ்சாவூர் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை சற்று தாமதமாக திறக்கப்பட்டது. பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சம்பாவிற்கான சாகுபடி பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.

சம்பா சாகுபடியை பொறுத்தவரையில் விவசாயிகள் நீண்ட 180 நாட்கள் நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதன் பின்னர் நாற்றங்கால் தயாரித்தனர். தற்போது நாற்றங்கால் வளர்ந்து நடுவுக்கு தயாராகி விட்டதால் சம்பா நாற்று நடும் பணிகள் பெரும்பாலான இடங்களில் நடந்து வருகின்றன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டமான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், பூண்டி, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் நடுவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நாற்றுகள் பறிக்கும் பணி, நடவுப்பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் இயந்திரம்மூலம் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இயந்திரம்மூலம் நடுவதால் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த வயல்களுக்கு செல்கின்றனர்.

The post பம்பு செட் மற்றும் மழையை நம்பி சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் நாற்று பறிப்பு, நடவுகளில் பெண்கள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: