பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி

 

அவிநாசி, ஜூலை31: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய, நகர திமுக இலக்கிய அணி சார்பில் 16ம் ஆண்டு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட இலக்கிய அணித்தலைவர் இராயப்பா தலைமை தாங்கினார். ஒன்றிய இலக்கிய அணிசெயலாளர் இராமசாமி வரவேற்றார். பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் நீலிபாளையம் திருமுருகன் என்கிற மாணவன் முதல் பரிசு வென்றார். சேவூர் மிருத்திகா என்கிற மாணவி இரண்டாம் பரிசையும், ஸ்ரீசக்தி பள்ளி மாணவி சாயி மூன்றாவது பரிசையும் வென்றனர்.

விழாவில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவன் திருமுருகனுக்கு முதல் பரிசு 1 கிராம் தங்கமும், மிருத்திகா என்கிற மாணவிக்கு 2ம் பரிசு 10 கிராம் வெள்ளியும், ஸ்ரீசக்தி பள்ளி மாணவி சாயிஸ்ரீ க்கு 3ம் பரிசு 5 கிராம் வெள்ளியும் மற்றும் ஆறுதல் பரிசுகளையும் வழங்கி, மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

விழாவில்,மாவட்ட திமுக அவைத்தலைவர் நடராஜ், மாவட்ட துணைசெயலாளர் டிஜிட்டல் சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் சிவப்பிரகாஷ்,. சேவூர் ஒன்றிய திமுக செயலாளர் பால்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், திமுக நகர செயலாளர் திராவிடன் வசந்தகுமார், மாநகர அவைத்தலைவர் ஈசுவரமூர்த்தி, நடுவர் தமிழன்பன்., முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம், நடுவச்சேரி ஊராட்சித்தலைவர் வரதராஜ், முன்னாள் நகர திமுக செயலாளர்கே.சி. பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் நன்றி கூறினார்.

The post பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: