பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி

ஊத்தங்கரை, செப்.21: ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் மற்றும் 3ம் ஆண்டு பயிலும் அனைத்து துறை மாணவ, மாணவிகளுக்கு தொழில் முனைவோராக இருநாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இப்பயிற்சி நிகில் பவுண்டேசன் அமைப்பை சார்ந்த பயிற்சியாளர்கள் மூலம், ‘நானும் ஒரு டாடா’ எனும் தலைப்பில் தொழில் முனைவோருக்கான தகுதிகள், தொழில்முனைவோர் வகைகள், அறம் சார்ந்த வணிகம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மக்கள் தொகையில் அதிகளவு இளைஞர்களை கொண்ட நம் நாட்டில் பெருமளவு இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறினால், வேலைவாய்ப்புகள் பெருகி, பொருளாதாரத்தில் நாடு முன்னேறும் உள்ளிட்ட விவரங்களை நிகில் நாகலிங்கம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமையேற்றார்‌. தொழில்முனைவோர் அலகு அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் மூர்த்தி, சபாரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.

The post பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: