பழநியில் 10 நாளில் 120 பேருக்கு கொரோனா-அதிக பாதிப்புள்ள பகுதிக்கு சீல்

பழநி : தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. பழநி, தொப்பம்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பழநி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கல்லூரியிலும் 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பழநி பகுதியில் 3 பேருக்குமேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏரியாக்களை தடுப்புகள் அமைத்து சீல் வைத்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்படி பழநி டவுன், பெரியப்பா நகர் பகுதியில் 4 பேர் பாதிக்கப்பட்டதால் நேற்று சுகாதாரத்துறையினர் அப்பகுதிக்கு சீல் வைத்து தடுப்புகள் அமைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் ஜீவானந்தம் தெரு பகுதியிலும் தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 14 நாட்கள் தடுப்புகள் அமைக்கப்படும் என்றும்,கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களும் முக்கவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பழநி பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.நேற்று 27 பேருக்கு பாதிப்பு பழநி பகுதியில் ேநற்று கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்த 8 பேர் உள்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. …

The post பழநியில் 10 நாளில் 120 பேருக்கு கொரோனா-அதிக பாதிப்புள்ள பகுதிக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: