பழங்குடிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் அரசுக்கு, காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர்: பழங்குடிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) ஜனநாயக சீர்திருத்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) ஜனநாயக சீர்திருத்த சங்கம் புதிய கிளை திறப்பு விழா, மாநில, மண்டல, மாவட்ட, செயற்குழு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று தஞ்சாவூர் வடக்கு வீதியில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நாகை பன்னீர்செல்வம், மாநிலத்தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உதவி தலைவர் பொன்சேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

The post பழங்குடிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் அரசுக்கு, காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: