பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

அயோத்தியாப்பட்டணம், செப்.21: அயோத்தியாப்பட்டணம் அடுத்த, வலசையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிகளுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் வரவேற்றார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் கலந்துகொண்டு, 155 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜேந்திரன், அசோகன், லோகு, தயாநிதி, இளங்கோ, அருண், கண்ணன், நாகராஜ், பழனிசாமி, சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Related Stories: