பரமக்குடி அருகே மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி

பரமக்குடி, மே 30: பரமக்குடி அருகே மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் பலியானது. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மேலப்பெருங்கரை கிராமத்தில் வயல்வெளியில் ராமு என்பவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: