பயிர் காப்பீட்டிற்கு போலி நிறுவனத்தில் யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம்

சிவகங்கை, ஜூலை 19: பயிர் காப்பீட்டிற்கு போலி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகளால் கடந்த 7ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்திட மத்திய வேளாண்மைத் துறையினால் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனம் என்ற பெயரில் போலியான நிறுவனம், இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு களப்பணியாளர்களை நியமிக்க, விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.250 கட்டணமாக செலுத்துமாறு விளம்பரம் செய்து வருவது என கண்டறியப்பட்டுள்ளது. இப்போலி நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி எவரும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பயிர் காப்பீட்டிற்கு போலி நிறுவனத்தில் யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் appeared first on Dinakaran.

Related Stories: