பனிமய மாதா பேராலயத்தில் நன்றி திருப்பலி: கொடியிறக்கம்

தூத்துக்குடி, ஆக 7: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா, நன்றி திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 442வது ஆண்டு திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடந்து வந்தது. கடந்த 5ம் தேதி பனிமய அன்னையின் தேர் பவனி நடைபெற்றது. நேற்று நன்றியறிதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலி பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் நடந்தது. இதில் ஆலய உபகாரிகளுக்காகவும், பெருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 6.30 மணிக்கு 2ம் திருப்பலியும், தொடர்ந்து திருவிழா கொடியிறக்கமும் நடைபெற்றது. கடந்த 11 நாட்களாக ஆலய திருவிழாவில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு ஆலய நிர்வாகம் மற்றும் இறைமக்கள் சார்பில் பாராட்டுதலும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

The post பனிமய மாதா பேராலயத்தில் நன்றி திருப்பலி: கொடியிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: