நேரு சர்வதேச பள்ளியின் புதிய மாணவர்கள் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா

 

கோவை, ஆக.2: நேரு சர்வதேச பள்ளியின் 2023-24ம் ஆண்டிற்கான புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பு தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவபிரகாஷ் வரவேற்றார். கோவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் துணைத் தளபதி ஜின்சி பிலிப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். மாணவர்கள் தலைமைப்பண்பு, ஒழுக்கம் ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்வது மாணவர்கள் எதிர்கால தேசத்தின் நலனைக் கட்டமைக்க ஏதுவாக இருக்கும் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவர் தலைவர்கள் அனைத்து நிலைகளிலும் முன்னோடியாக செயல்பட வேண்டும் என்று கூறி தனது வாழ்த்துகளைத் பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் மனவுறுதியை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

The post நேரு சர்வதேச பள்ளியின் புதிய மாணவர்கள் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: