நாமக்கல் அருகே மின்மாற்றி வெடித்து 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடை: கிராம மக்கள் தீப்பந்தப் போராட்டம்

நாமக்கல் : நாமக்கல் அருகே மின்மாற்றி வெடித்து 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதால் மார்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் கிராம மக்கள் தீப்பந்த போராட்டம் நடத்தினர். எலச்சிபாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றி நேற்று பிற்பகல் திடீரென வெடித்ததால் எலச்சிபாளையம், பொன்னையார், ஆயித்தாக்குட்டை, காரியம் பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. இரவு நெடுநேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாததால் கிராம மக்கள் இருளில் தத்தளித்தனர். கை குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இதையடுத்து எலாச்சிபாளையம் சத்யா நகர் பகுதியில் திரண்ட மார்சிஸ்ட் கட்சியினரும், கிராம மக்களும் கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 10 மணி நேரமாக வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்து நடந்த நூதன போராட்டம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. மின்தடை நீக்கப்படாமல் பலமணி நேரம் தவித்த கிராம மக்கள் கையில் தீப்பந்தத்துடன் நடத்திய போராட்டம் மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post நாமக்கல் அருகே மின்மாற்றி வெடித்து 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடை: கிராம மக்கள் தீப்பந்தப் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: