நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம்,செப்.21: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது. அதே போல் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்;கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட நடப்பு கல்வி ஆண்டின் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ளது. காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடியாக சேருவதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் பொழுது கைபேசி, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: