நயினார்பத்து பஞ்சாயத்தில் ரூ.13.57 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

உடன்குடி, ஜூலை 30: உடன்குடி யூனியன் நயினார்பத்து பஞ்சாயத்தில் ரூ.13.57 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நயினார்பத்து பஞ். தலைவர் அமுதவல்லி தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், உடன்குடி பிடிஓக்கள் ஜான்சிராணி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டசத்து திட்ட அலுவலர் வரவேற்றார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார்.

இதில் பஞ். துணை தலைவர் ராஜகுமாரி, வார்டு உறுப்பினர் முத்துமணி, திமுக மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரஞ்சன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் கல்லாசி, ஜான்பாஸ்கர், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மதன்ராஜ், மணப்பாடு ஜெயப்பிரகாஷ், பெப்சிமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நயினார்பத்து பஞ்சாயத்தில் ரூ.13.57 லட்சத்தில் அங்கன்வாடி மையம் appeared first on Dinakaran.

Related Stories: